Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எம்.பி.பி.எஸ்.,அரசு ஒதுக்கீட்டு இடங்களை உறுதி செய்ய கோரிக்கை

எம்.பி.பி.எஸ்.,அரசு ஒதுக்கீட்டு இடங்களை உறுதி செய்ய கோரிக்கை

எம்.பி.பி.எஸ்.,அரசு ஒதுக்கீட்டு இடங்களை உறுதி செய்ய கோரிக்கை

எம்.பி.பி.எஸ்.,அரசு ஒதுக்கீட்டு இடங்களை உறுதி செய்ய கோரிக்கை

ADDED : ஜூன் 20, 2024 03:34 AM


Google News
புதுச்சேரி : எம்.பி.பி.எஸ்., அரசு ஒதுக்கீட்டுஇடங்களை உறுதி செய்ய வேண்டும் என புதுச்சேரி மாணவர் பெற்றோர் நல சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சங்க தலைவர் பாலா கவர்னர்,முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

கடந்த 2023-24 ம் ஆண்டில் மூன்று தனியார் கல்லுாரிகளில் 650 எம்.பி.பி.எஸ்., இடங்களில் 239 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டது. இது 35 சதவீதமாகும். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் தனியார் கல்லுாரிகளில் இருந்து 69 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக பெறப்படுகின்றது.

ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் மொத்தமுள்ள 69 இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்காக ஒதுக்கப்படுகின்றது.

சுப்ரீம் கோர்ட்டில் நீட் தேர்வின் தொடர்பான வழக்கு முடிந்த பின்னரே நீட் தேர்வின் மாநில தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

ஜூலை இரண்டாவது வாரத்தில் நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வினை நடத்த தேசிய மருத்துவ கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

எனவே புதுச்சேரி அரசு மூன்று கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., அரசு ஒதுக்கீட்டுஇடங்களை உறுதி செய்ய வேண்டும்.காலதாமதமின்றி மருத்துவ கல்வி கட்டணங்களையும் கல்வி கட்டண நிர்ணயக்குழு நிர்ணயிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us