/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாகூரில் அறுந்து விழுந்த மின் கம்பி சீரமைப்பு பாகூரில் அறுந்து விழுந்த மின் கம்பி சீரமைப்பு
பாகூரில் அறுந்து விழுந்த மின் கம்பி சீரமைப்பு
பாகூரில் அறுந்து விழுந்த மின் கம்பி சீரமைப்பு
பாகூரில் அறுந்து விழுந்த மின் கம்பி சீரமைப்பு
ADDED : ஜூலை 12, 2024 10:58 PM

பாகூர்: மின் துறையின் மீது தொடர் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாகூரில் வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பி சீரமைக்கப்பட்டது.
பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்கம்பிகள் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால், பலகீனமான நிலையில் உள்ள மின் கம்பிகள், காற்று பலமாக வீசும் போது, அறுந்து விழுகிறது. அறுந்து கிடக்கும் மின் கம்பிகளில் சிக்கி விவசாயிகள் மட்டுமின்றி ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் உயிரிழந்து வருகின்றன. கடந்த மாதம் பாகூரில் ஒரு மூதாட்டியும், நேற்று முன்தினம் குடியிருப்புபாளையத்தில் ரேஷன் கடை ஊழியர் ஒருவரும், வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மின் துறையின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் என குற்றச் சாட்டு எழுந்தது.
இந்நிலையில், பாகூர் பங்களா வீதியின் மேற்கு பகுதியில் உள்ள வயல்வெளியில் கடந்த சில நாட்களுக்கு முன், அவ்வழியாக சென்ற மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், அது சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. மின் துறையின் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாகூர் மின் துறை ஊழியர்கள், வயல் வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை சரி செய்தனர்.