/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.ஆர்க்., படிப்பிற்கான புதுப்பிக்கப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு பி.ஆர்க்., படிப்பிற்கான புதுப்பிக்கப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு
பி.ஆர்க்., படிப்பிற்கான புதுப்பிக்கப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு
பி.ஆர்க்., படிப்பிற்கான புதுப்பிக்கப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு
பி.ஆர்க்., படிப்பிற்கான புதுப்பிக்கப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு
ADDED : ஜூலை 09, 2024 04:48 AM
புதுச்சேரி, : பி.ஆர்க்., படிப்பிற்கான புதுப்பிக்கப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பி.ஆர்க்., எனப்படும் இளநிலை கட்டடவியல் பொறியியல் படிப்பில் சேர சென்டாக்கில் கடந்த மாதம் விண்ணப்பம் பெறப்பட்டது.
அனைத்து விண்ணப்ப பரிசீலனையும் முடிந்து பி.ஆர்க்., படிப்பில் சேருவதற்கான வரைவு தரவரிசை பட்டியல் www.centacpuducherry.in என்ற சென்டாக் இணைதளத்தில் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. தேசிய கட்டடவியல் திறனறித் தேர்வு அல்லது ஜே.இ.இ.,ஸ்கோர் மற்றும் பிளஸ்2 மதிப்பெண்ணிற்கு 50க்கு 50 விகிதத்தில் முக்கியத்துவம் கொடுத்து இந்த மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டது.
இதில் ஆட்சேபனைகள் கடந்த 6ம் தேதி வரை பெறப்பட்ட நிலையில் புதுப்பிக்கப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களுடைய லாகின் மூலம் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம். எஸ்.எம்.எஸ்., இமெயில் வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட வரைவு தரவரிசை பட்டியலில் ஆட்சேபனைகள் இருந்தால், centacugnn@dhtepdy.edu.in என்ற இணையதளத்தில் நாளை 10ம் தேதி மதியம் 2 மணி வரை தெரிவிக்கலாம்.
பழைய குடியிருப்பு, குடியுரிமை, சிறப்பு இட ஒதுக்கீடு சான்றிதழ்களை சமர்பித்துள்ள மாணவர்கள் நாளை 10ம் தேதி மதியம் 2 மணிக்குள் புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்களை சமர்பிக்கலாம் எனவும் சென்டாக் அறிவித்துள்ளது.