ADDED : ஆக 03, 2024 04:38 AM

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் கோவிலில், 96ம் ஆண்டு கும்ப சோறு வழங்கும் விழா நடந்தது.
புதுச்சேரி, ராஜ்பவன் தொகுதி வாழைக்குளம் பகுதியில் செங்கழுநீர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடி மாதம் மூன்றாம் வெள்ளியையொட்டி, 96ம் ஆண்டு கும்ப சோறு வழங்கும் விழா நேற்று நடந்தது.
மாநில காங்., வழக்கறிஞர் அணி தலைவர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் காங்., மாநில தலைவர் சுப்ரமணியன், காங்., சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், சபரிராஜன், ராஜ்பவன் தொகுதி காங்., நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, செங்கழுநீர் அம்மனுக்கு கும்ப சோறு படைக்கப்பட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.