ADDED : ஆக 05, 2024 04:32 AM
நெட்டப்பாக்கம்: சொக்கம்பட்டு ஜெயமங்கள துார்காம்பிகை கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த சொக்கம்பட்டு-கரியமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஜெயமங்கள துர்காம்பிகை கோவிலில் நேற்று மாலை 4.30 மணிக்கு ராகு கால சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.