ADDED : ஜூன் 02, 2024 05:03 AM

தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு புதுச்சேரியில் இருந்து நேரடி ரயில் சேவை கிடையாது. வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 11:30 மணிக்கு புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் யஸ்வந்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்றால், அதிகாலை 4:15 மணிக்கு தர்மபுரி ரயில்நிலையம் செல்லாம். அங்கிருந்து 43 கி.மீ., துாரத்தில் உள்ள ஒகேனக்கலுக்கு, பஸ் அல்லது டாக்ஸி மூலம் செல்லாம்.
புதுச்சேரியில் இருந்து ஒகேனக்கலுக்கு ஆம்னி பஸ்கள் இல்லை.
புதுச்சேரி பஸ் நிலையத்தில் தினசரி காலை 6:00 மணி, மதியம் 1:00 மணி மற்றும் மாலை 6:00 மணி என, மூன்று தமிழக அரசு பஸ்கள் ஒக்கனக்கலுக்கு இயக்கப்படுகிறது. இதுபோல் ஒகேனக்கலில் இருந்து காலை, மதியம், மாலை என மூன்று பஸ்கள் புதுச்சேரிக்கு இயக்கப்படுகிறது.