/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் தி.மு.க.,- காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் தி.மு.க.,- காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு
புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் தி.மு.க.,- காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு
புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் தி.மு.க.,- காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு
புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் தி.மு.க.,- காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு
ADDED : ஆக 05, 2024 09:33 PM

புதுச்சேரி:
புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரத்தில் பா.ஜ., எம்.எல்.ஏ., க்களுடன் தி.மு.க.,- காங்., எம்.எல்.ஏ.,க்கள் கடும் வாக்குவாதத்தில், சபாநாயகர் செல்வம் பதில் அளித்ததைக் கண்டித்து தி.மு.க., காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 31ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கியது. நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடந்தது.
அப்போது, காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன்: மாநிலம் வளர்ச்சி அடையவில்லை. காமராஜர் கல்வி நிதியுதவி மாணவர்களுக்கு தரவில்லை.
அமைச்சர் நமச்சிவாயம்: அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். மாணவர்களுக்கு அரசு பணம் தந்து வருகின்றது. இது தவறான தகவல்.
வைத்தியநாதன்: மாநில அந்தஸ்து பற்றி பட்ஜெட்டில் ஒன்றுமே குறிப்பிடவில்லை. கவர்னர் உரையிலும் இல்லை. மத்தியிலும், மாநிலத்திலும் உங்களது கூட்டணி ஆட்சி தான் நடக்கின்றது. பிறகு ஏன் மாநில அந்தஸ்து பற்றி குறிப்பிடவில்லை. கூட்டணி அரசு இருந்தும் புதுச்சேரி அரசு வஞ்சிக்கப்படுகிறது. இதனை முதல்வர் உணர வேண்டும்.
அமைச்சர் நமச்சிவாயம்: மத்திய அமைச்சராக இருந்த முந்தைய முதல்வர் ஏன் மாநில அந்தஸ்து வாங்கி தரவில்லை. அதை பற்றி பேச உங்களுக்கு அருகதையில்லை.
சபாநாயகர் செல்வம்: மாநில அந்தஸ்துக்காக,12 முறை காங்., அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. அப்போது ஏன் வாங்கி தரவில்லை. அப்போது மத்தியில் காங்., அரசு இருந்தது. பிரதமர் அலுவலக அமைச்சராக முந்தைய முதல்வர் இருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, கடந்த முறை மாநில அந்தஸ்துக்காக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். முடியாது என திருப்பி அனுப்பினர்.
அப்போது, எழுந்த எதிர்க்கட்சி தலைவர் சிவா, பா.ஜ.,வுக்கு ஆதரவாக சபாநாயகர் பேசுவதை கண்டித்து வௌிநடப்பு செய்வதாக கூறினார். அவரை தொடர்ந்து தி.மு.க., -காங்., எம்.எல்.ஏ.,க்கள் வௌிநடப்பு செய்தனர்.