/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பட்டதாரிகள் படையாக மாறும் புதுச்சேரி ஊர்க்காவல் படை பட்டதாரிகள் படையாக மாறும் புதுச்சேரி ஊர்க்காவல் படை
பட்டதாரிகள் படையாக மாறும் புதுச்சேரி ஊர்க்காவல் படை
பட்டதாரிகள் படையாக மாறும் புதுச்சேரி ஊர்க்காவல் படை
பட்டதாரிகள் படையாக மாறும் புதுச்சேரி ஊர்க்காவல் படை
ADDED : ஜூலை 14, 2024 06:00 AM
புதுச்சேரி : 10ம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட ஊர்க்காவல்படை வீரர் பணிக்கு 350 பட்டதாரிகள் தேர்வு
புதுச்சேரி போலீசில் காலியாக உள்ள 420 ஆண்கள், 80 பெண் ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு செய்ய விண்ணப்பம் பெறப்பட்டது. 10ம் வகுப்பு கல்வி தகுதி என நிர்ணயிக்கப்பட்டது. ஆண்கள் 15,697 பேரும், பெண்கள் 4492 பேர் என மொத்தம் 20,189 பேர் விண்ணப்பித்தனர்.
கடந்த பிப்., மாதம் உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 3,034 ஆண்கள், 1,195 பெண்கள் என, மொத்தம் 4,229 பேர் தகுதி பெற்றனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் 30ம் தேதி நடத்தப்பட்டு, மறுநாளான 1ம் தேதி முடிவுகள் வெளியானது. இதில், 483 பேர் வெற்றி பெற்றனர்.
தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் பரிசோதனைகள் கடந்த வாரம் நடத்தி முடிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஊர்க்காவல்படைக்கு புதுச்சேரி பிராந்தியத்தில் தேர்வான 317 பேருக்கு மட்டும் முதல்வர் ரங்கசாமி பணி ஆணை வழங்கினர்.
ஊர்க்காவல்படை வீரர் பணிக்கு கல்வி தகுதி 10ம் வகுப்பு என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தேர்வான 483 பேரில், பி.எஸ்.சி., பி.ஏ., பி.காம்., எம்.ஏ., எம்.எஸ்.சி., என 290 பட்டதாரிகளும், பி.டெக்., படித்த இளைஞர்கள் 55 பேர், எம்.டெக்., படித்த முதுகலை பட்டதாரிகள் 5 பேர் தேர்வாகி பணி ஆணை பெற்றுள்ளனர். மீதமுள்ள 133 பேர் பிளஸ் 2 முடித்தவர்கள்.
அரசு பணிக்கான தகுதியான வயதுடன், 40 ஆயிரம் இளைஞர்கள் காத்திருக்கின்றனர். அரசு பணிக்கான வயது முதிர்வு பெற்று 1 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.