/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பல்கலையில் இலக்கிய ஆய்வு இதழ் வெளியீடு புதுச்சேரி பல்கலையில் இலக்கிய ஆய்வு இதழ் வெளியீடு
புதுச்சேரி பல்கலையில் இலக்கிய ஆய்வு இதழ் வெளியீடு
புதுச்சேரி பல்கலையில் இலக்கிய ஆய்வு இதழ் வெளியீடு
புதுச்சேரி பல்கலையில் இலக்கிய ஆய்வு இதழ் வெளியீடு
ADDED : ஜூலை 23, 2024 02:23 AM

புதுச்சேரி : பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் இலக்கிய ஆய்விதழ் வெளியிடப்பட்டது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை தனது முதல் இலக்கிய ஆய்விதழை பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், முன்னிலையில் வெளியிட்டது.
இணைப் பேராசிரியர் ஹர்ப்ரீத் கவுர் வோரா வரவேற்றார். பெண்கள், சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் இலக்கிய கண்ணோட்டங்கள் என்ற தலைப்பிலான சிறப்பு இதழை துணைவேந்தர் தரணிக்கரசு வெளியிட, கலாச்சார மற்றும் கலாச்சார உறவுகளின் இயக்குனர் கிளமென்ட் லூர்து பெற்றுக்கொண்டார்.
கல்விப்புல முதன்மையர் திலகன் தலைமை தாங்கினார். ஆய்விதழின் முதல் பிரதிக்கு கட்டுரைகளை சமர்ப்பித்து பங்களித்த ஆய்வாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
துணைவேந்தர் தரணிக்கரசு பேசும்போது, உயர்தர ஆராய்ச்சி வெளியீடு முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, ஒரு வலுவான ஆராய்ச்சி சூழலை உருவாக்க, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆராய்ச்சி திறன்களை வலுப்படுத்துவதில் பல்கலைக்கழகம் கவனம் செலுத்தி வருகின்றது என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து ஆராய்ச்சி வெளியீடுகள் நிறுவன தரவரிசைகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. துறைத் தலைவர் மார்க்ஸ், ஆசிரியர் குழுவினரை இதழைத் தொடங்கியதற்காகப் பாராட்டினார்.
இணைப் பேராசிரியர் ஐஸ்வர்யா பாபு, நன்றி கூறினார்.