Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாத்திமா பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

பாத்திமா பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

பாத்திமா பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

பாத்திமா பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

ADDED : ஜூலை 14, 2024 06:56 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி, : பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மேற்படிப்பு பயில ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

புதுச்சேரி, கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1990ல் பிளஸ் 2 குரூப்-2 மாணவர்கள் நலச்சங்கத்தை ஏற்படுத்தி, கடந்த 2014 ஆண்டு முதல் ஏழை மாணவர்களுக்கு இப்பள்ளியிலேயே படிப்பை தொடர உதவி வருகின்றனர்.

இப்பள்ளியில் பத்தாம் ஆண்டாக ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அப்துல் ரஹ்மான்-20 ஆயிரம், ரித்தீஷ், பிரிவின்தாஸ்-15 ஆயிரம், லட்சுமணன்-10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

கடந்த 2021-22ல் 10ம் வகுப்பு முடித்து ஊக்கத் தொகை பெற்று, இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று கல்லுாரியில் சேர இருக்கும் மாணவர்கள் சிவப்பிரியன், பரத், பிரியரஞ்சன், பாலாஜி ஆகியோரை முன்னாள் மாணவர்கள் கவுரவித்தனர். பள்ளி முதல்வர் மகிமை அடிகளார், முன்னாள் மாணவர்களை கவுரவித்தார்.

ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோ பேசுகையில், 'ஏழை மாணவர்கள் தங்கள் கனவுகளை எட்டி பிடிக்க வேண்டும். அவர்களும் மற்ற மாணவர்களைப் போல் கல்லுாரியில் சேர்ந்து டாக்டராகவோ, இன்ஜினியராகவோ, கலை இலக்கியங்களிலோ சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி துவங்கப்பட்டது.

தொடர்ந்து 10 ஆண்டுகளாக இத்திட்டத்தை செயல்படுத்துவது மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.

பாத்திமா பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருங்கிணைப்பாளர் மேத்யூஸ் ஆரோக்கியசாமி கூறுகையில், '10ம் வகுப்பிற்கு மேல் கட்டணம் செலுத்தி படிக்க இயலாத ஏழை மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

ஊக்கத்தொகை ஏழை மாணவர்களின் நலனுக்காகவும், அவர்கள் கல்வியில் பிடித்த துறைகளைத் தேர்வு செய்து நல்ல நிலையில் உயரும் நோக்கத்திற்காக வழங்கப்படுகிறது' என்றார்.

ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் முன்னாள் பள்ளி முதல்வர் ஜான்போஸ்கோ அடிகளாரின் வழிகாட்டுதலின்படி துவங்கப்பட்டது.

இந்ததிட்டத்தைமுன்னாள் மாணவர்களான ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மனநல மருத்துவர் வைத்தியநாதன், அமெரிக்க மென்பொருள் பொறியாளர் ராஜபிராசத், ைஹதராபாத் இன்போ மென்பொருள் இயக்குனர் சத்தியநாராயணன், கட்டட பொறியாளர் மேத்யூ ஆரோக்கியசாமி, பொதுப்பணித் துறை பொறியாளர் தணிகைவேல், பொறியாளர் வளவன், சீதாராமன் ஆகியோர் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகின்றனர்.

உதவி பெற்ற மாணவர்கள் நெகிழ்ச்சி

மாணவர் பிரியரஞ்சன் கூறுகையில், '10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த போதிலும், குடும்ப கஷ்டம் காரணமாக மேற்கொண்டு படிக்க சிக்கல் ஏற்பட்டது. இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் பண உதவி செய்ததால் தான், இப்பள்ளியிலேயே படிப்பினை தொடர்ந்து பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற முடிந்தது. இந்த உதவியை என்றும் மறக்க முடியாது' என்றார்.மாணவர் அருண்பாலாஜி கூறுகையில், 'நடுத்தர குடும்பத்தினை சேர்ந்த என்னால் அந்த நேரத்தில் பணத்தை கட்ட சிரமமாக இருந்தது. முன்னாள் மாணவர்கள் உதவி செய்யவில்லையென்றால் ரொம்ப கஷ்டமாக இருக்கும். அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்' என்றார்.மாணவர் பரத் கூறுகையில், பள்ளியின் முன்னாள் மாணவர்களை போன்று நானும் நல்ல நிலைக்கு உயர்ந்து, இதேபோல் உதவி செய்வேன்' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us