/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இஸ்திரி பெட்டியை உடைத்து ஆர்ப்பாட்டம் இஸ்திரி பெட்டியை உடைத்து ஆர்ப்பாட்டம்
இஸ்திரி பெட்டியை உடைத்து ஆர்ப்பாட்டம்
இஸ்திரி பெட்டியை உடைத்து ஆர்ப்பாட்டம்
இஸ்திரி பெட்டியை உடைத்து ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 12, 2025 06:29 AM

புதுச்சேரி: புதுச்சேரி புதிரை வண்ணார் விடுதலை இயக்கம், மாநில தலித் பழங்குடியினர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜென்மராகினி மாதா ஆலயம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வண்ணார் விடுதலை இயக்கத் தலைவர் தெய்வநீதி தலைமை தாங்கினர். துணைத் தலைவர் கோவிந்தன், பொது செயலாளர் அர்ஜூனன் உட்பட பலர் பங்கேற்றனர். சலவை தொழில் மற்றும் ஈமச்சடக்கு தொழிலை மேம்படுத்த சரியான நலத்திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். சிறப்பு கூறு நிதி மூலம் சலவை துறை, இலவச மனைப்பட்டா, குடியிருப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மூலம் வழங்கப்படும் அடுப்புக்கரி சலவை பெட்டி (இஸ்திரி பெட்டி) தரமற்ற நிலையில் உள்ளது. அதனை மாற்றி ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் சிலிண்டர் அயன் பாக்ஸ், ஆண்டுக்கு 6 இலவச காஸ் சிலிண்டர் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தரமற்ற நிலையில் வழங்கியதாக இஸ்திரி பெட்டியை சாலையில் போட்டு உடைத்ததால், பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.