/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேளாண்துறை முன் போராட்டம்: எதிர்க்கட்சி தலைவர் சிவா எச்சரிக்கை வேளாண்துறை முன் போராட்டம்: எதிர்க்கட்சி தலைவர் சிவா எச்சரிக்கை
வேளாண்துறை முன் போராட்டம்: எதிர்க்கட்சி தலைவர் சிவா எச்சரிக்கை
வேளாண்துறை முன் போராட்டம்: எதிர்க்கட்சி தலைவர் சிவா எச்சரிக்கை
வேளாண்துறை முன் போராட்டம்: எதிர்க்கட்சி தலைவர் சிவா எச்சரிக்கை
ADDED : ஜூலை 17, 2024 06:26 AM

புதுச்சேரி: புதுச்சேரி விவசாயிகளுக்கு சம்பா பருவத்திற்குள் விதைகள் வழங்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி அரசின் வேளாண் துறை ஆண்டுதோறும் சம்பா பருவத்திற்கு தேவையான நெல் விதைகளை முன்கூட்டியே கொள்முதல் செய்யாமல் அலட்சியம் செய்கிறது.
ஆண்டுக்கு, 160 டன் நெல் விதை தேவைப்படுகிறது எனில், அரசிடம் வெறும், 40 டன் மட்டுமே இருப்பு உள்ளது. மீதம், 120 டன் நெல் விதைகளை கொள்முதல் செய்வதில் கால தாமதம் செய்கிறது.
காலத்தோடு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்காததால் பருவம் தவறி அறுவடை செய்யப்படுகிறது. சம்பா பருவத்திற்கு தேவையான உயிர் உரங்கள், உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதில்லை.
ஆடி பட்டத்திற்கு தேவையான காய்கறி விதைகளை காலத்தோடு விதைகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு நிதி ஒதுக்கியும் புதுச்சேரி வேளாண்துறை மெத்தனமாக செயல்படுவது ஏற்புடையதல்ல. பழமையான படுகை அணையின் நடுப்பகுதி மற்றும் கீழ்தளம், சில ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் சேதமடைந்தது.
இதனால் அந்த படுகை அணையில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் வீணாக வெளியேறுவதால், அதை நம்பியுள்ள, 20 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு அணை கட்ட ரூ. 20 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இன்னும் அணை கட்டும் பணி துவங்கவில்லை.
விவசாயத்திற்குதேவையான நடவடிக்கைகளை வேளாண் துறை மேற்கொள்ளதவறும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.