/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரோபோட்டிக்ஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு ரோபோட்டிக்ஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு
ரோபோட்டிக்ஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு
ரோபோட்டிக்ஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு
ரோபோட்டிக்ஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு
ADDED : ஜூலை 25, 2024 05:33 AM

புதுச்சேரி: சிங்கப்பூரில் நடந்த சர்வதேச ரோபோட்டிக்ஸ் போட்டியில் வென்ற புதுச்சேரி மாணவர்களை முதல்வர் ரங்கசாமி பாராட்டினார்.
புதுச்சேரி, காலாப்பட்டு, தி ஸ்டடி லீ எகோல் இன்டர்நேஷனல் பள்ளியில் இருந்து, 28 மாணவ - மாணவியர் சிங்கப்பூரில் நடந்த, ரோபோரோர்ஸ் சர்வதேச ரோபோடிக்கஸ் போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த அணிக்கு, பள்ளி கல்வி இயக்குநர் உமா, தலைமை தாங்கினார். இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம், 48 அணிகள் பங்கேற்றன. தி ஸ்டடி லீ எக்கோல் இன்டர்நேஷனல் பள்ளியின் மாணவர்கள், முதன்மைப் பிரிவில் 4வது பரிசையும், இரண்டாம் நிலைப் பிரிவில் 3வது பரிசையும் பெற்றனர்.
இந்தியா திரும்பிய மாணவர் குழுவினரை பள்ளியின் துணை முதல்வர் பிரபு மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் வரவேற்றனர்.
அவர்கள், முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாணவர்களின் சாதனைகளை, தி ஸ்டடி லீ எக்கோல் இன்டர்நேஷனல் தலைவர் செரியன் பாராட்டினார்.