/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரீமியர் கிரிக்கெட் போட்டி: பாண்டியர் அணி சாம்பியன் பிரீமியர் கிரிக்கெட் போட்டி: பாண்டியர் அணி சாம்பியன்
பிரீமியர் கிரிக்கெட் போட்டி: பாண்டியர் அணி சாம்பியன்
பிரீமியர் கிரிக்கெட் போட்டி: பாண்டியர் அணி சாம்பியன்
பிரீமியர் கிரிக்கெட் போட்டி: பாண்டியர் அணி சாம்பியன்
ADDED : ஜூன் 17, 2024 06:55 AM

புதுச்சேரி: பிள்ளைச்சாவடி பிரீமியர் கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பெரிய காலாப்பட்டு அடுத்த பிள்ளைச்சாவடியில் 5ம் ஆண்டு பிரீமியர் கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் துவங்கி நடந்து வந்தது. போட்டிகள் 12 ஓவர் கொண்டு நடத்தப்பட்டன.
இறுதி போட்டிக்கு பாண்டியர் மற்றும் பல்லவர் அணிகள் தகுதி பெற்றன. இப்போட்டி, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் களம் இறங்கிய பல்லவர் அணி 12 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர் அய்யனார் 21 ரன் எடுத்தார். பாண்டியர் அணியின் நிஷால், ரவிபிரசாத் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அடுத்து ஆடிய பாண்டியர் கிரிக்கெட் அணி 9 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 75 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்று, பிரீமியர் எடிசன்-5 சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணியின் வேல்முருகன் 32 ரன்களை எடுத்தார். பல்லவர் அணியின் முத்துகுமரன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
வெற்றிப் பெற்ற அணிக்கு மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் முத்துகுமரன், சீனிவாசன், முனியப்பன், ஜெயச்சந்திரன் ஆகியோர் பரிசு வழங்கினர். தொடர் நாயகன் விருது அய்யனாருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த ஜூனியர் பேட்ஸ்மேனாக பேரின்பன், சிறந்த சீனியர் பேட்ஸ்மேனாக முத்துகுமரன், சிறந்த ஜூனியர் பவுலராக ரவிபிரசாத், அய்யனார், சிறந்த சீனியர் பவுலராக சுதாகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதிக சிக்ஸர் விருது உதயசந்திரனுக்கு அளிக்கப்பட்டது.