/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு பயிற்சி ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு பயிற்சி
ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு பயிற்சி
ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு பயிற்சி
ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு பயிற்சி
ADDED : ஜூலை 03, 2024 09:22 AM
காரைக்கால்: காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தின் ட்ரோன் மூலம் நெற்பயிருக்கு மருந்து தெளிப்பு முறை குறித்து செயல்விளக்கப் பயிற்சி நடந்தது.
காரைக்கால் மாதுார் வேளாண் அறிவியல் நிலையத்தில் முதல்நிலை செயல்விளக்கு திடல் திட்டத்தின் கீழ் கொளக்குடி, அகரமாங்குடி, கருக்கன்குடி மற்றும் செல்லுார் கிராமங்களில் வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரவி வழிகாட்டுதலின்படி நேனோ டி.ஏ.பி.,யை ட்ரோன் மூலம் நெற் பயிருக்கு தெளிப்பதற்கான செயல்விளக்கம் நேற்று நடந்தது.
இதில் தொழில்நுட்ப வல்லுநர் (உழவியல்) அரவிந்த், நேனோ டி.ஏ. பி.,யை ட்ரோன் மூலம் பயன்படுத்தும் முறை, அளவு மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளிடம் விளக்கினார்.