/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மதுபான கடையில் தகராறு: 4 பேருக்கு போலீஸ் வலை மதுபான கடையில் தகராறு: 4 பேருக்கு போலீஸ் வலை
மதுபான கடையில் தகராறு: 4 பேருக்கு போலீஸ் வலை
மதுபான கடையில் தகராறு: 4 பேருக்கு போலீஸ் வலை
மதுபான கடையில் தகராறு: 4 பேருக்கு போலீஸ் வலை
ADDED : ஜூலை 08, 2024 05:29 PM
நெட்டப்பாக்கம்:டிரைவர் உள்ளிட்ட இருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெட்டப்பாக்கம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 42, இவர் நண்பர் சுந்தரமைூர்த்தியுடன் 41, நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மடுகரையில் உள்ள மதுபான கடையில் மது அருந்திக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு மது குடித்து கொண்டிருந்த மடுகரையைச் சேர்ந்த ராம் 27; வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை கீழே தள்ளிவிட்டார். இதனை கிருஷ்ணமூர்த்த தட்டிகேட்டார்.
இதையடுத்து ராம், அவர்களது நண்பர்கள் மடுகரை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் 28, சூர்யா 26, பிரகாஷ் 26 ஆகியோரை வரவழைத்து, பீர்பாட்டில், உருட்டு கட்டையால் கிருஷ்ணமூர்த்தி, சுந்தரமூர்த்தி ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.