முதியவர் இறப்பு போலீ்சார் விசாரணை
முதியவர் இறப்பு போலீ்சார் விசாரணை
முதியவர் இறப்பு போலீ்சார் விசாரணை
ADDED : ஜூன் 04, 2024 04:05 AM
காரைக்கால் : காரைக்காலில் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் திருப்பட்டினம் படுதார்கொள்ளை முத்தாம் பள்ளம் பேட் பகுதியை சேர்ந்த முத்தையன்,74; இவரது தாய் இறந்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட முத்தையன் இரண்டு நாட்களாக காணவில்லை , அவரை அவரது குடும்பத்தினர் தேடிவந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் கோட்டுச்சேரி கீழவெளி அரசாபுரம் வாய்க்காலில் இறந்து கிடந்தார்.
கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.