ADDED : ஜூன் 05, 2024 11:19 PM
காரைக்கால்: காரைக்காலில் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் பாரதியார் சாலையில் தனியார் பைக் விற்பனை நிறுவனத்தில் பணியாற்றும் சுரேஷ் என்பவர்கள் வழக்கம் போல் கடந்த 2ம் தேதி காலை கடையை திறக்க வந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
புகாரின் பேரில் நகர காவல் நிலைய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.