விளையாட்டு வீரர் தரவரிசை வெளியீடு
விளையாட்டு வீரர் தரவரிசை வெளியீடு
விளையாட்டு வீரர் தரவரிசை வெளியீடு
ADDED : ஜூன் 23, 2024 05:21 AM
புதுச்சேரி: புதுச்சேரி சென்டாக் மாணவர் சேர்க்கைக்கான விளையாட்டு வீரர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நீட் அல்லாத உயர் கல்வியில் சேர சென்டாக் தர வரிசை பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், ஆட்சேபனைகள் பெறப்பட்டு திருத்திய பட்டியல் நேற்று முன்தினம் சென்டாக் இணைதளத்தில், வெளியிடப்பட்டது.
மேலும், விளையாட்டு வீரர்களுக்கான வரைவு தரவரிசை பட்டியல், மாற்றுத்திறனாளி பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில், ஆட்சேபனைகள் இருந்தால், நாளை மறுநாள் 25ம் தேதி மாலை 5:00 மணிக்குள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பி.எஸ்.சி., நர்சிங் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. சுயநிதி, என்.ஆர்.ஐ., இடங்களுக்கு நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்கான தரவரிசை பட்டியல் தனியாக வெளியிடப்பட உள்ளது.
அதையடுத்து, மாணவர்கள் முதல் கட்ட கலந்தாய்வுக்கு தங்கள் விருப்ப பாடங்கள், கல்லுாரிகளை வரும் 25ம் தேதி மாலை 5:00 மணிக்குள் தேர்வு செய்து சமர்பிக்கலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.