/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உருளையன்பேட்டை தொகுதியில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை உருளையன்பேட்டை தொகுதியில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை
உருளையன்பேட்டை தொகுதியில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை
உருளையன்பேட்டை தொகுதியில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை
உருளையன்பேட்டை தொகுதியில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை
ADDED : மார் 14, 2025 04:26 AM

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., சார்பில், பொதுக்குழு உறுப்பினர் கோபால் ஏற்பாட்டில், கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது.
எதிர்க்கட்சி தலைவர் சிவா பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கி துவக்கி வைத்தார். தொடர்ந்து தொகுதி முழுதும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு வீடு, வீடாக சென்று பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில், தொகுதி செயலாளர் சக்திவேல், இலக்கிய அணி அமைப்பாளர் மோகன்தாசு, தொகுதி பொருளார் சசிகுமார், துணைச் செயலாளர் முருகன், மாநில வர்த்தகர் அணி துணை தலைவர் சண்முகசுந்தரம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரெமிஎட்வின் உட்பட பலர் பங்கேற்றனர்.