/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரக் கோரி மனு சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரக் கோரி மனு
சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரக் கோரி மனு
சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரக் கோரி மனு
சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரக் கோரி மனு
ADDED : ஜூன் 27, 2024 11:15 PM

புதுச்சேரி: நெல்லித்தோப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
அ.தி.மு.க., தொண்டர்கள் மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து அளித்த மனு;
நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதிக்குட்பட்ட சக்தி நகர் 1-வது தெருவில் அப்பகுதி மக்கள் தங்களின் சிறிய நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது என்னுடை முயற்சியால் சமுதாய நலக்கூடம் கட்டிக் கொடுக்கப் பட்டது.
ஆதிதிராவிடர் நலத்துறை நிதியில் இருந்து 85 லட்சம் ரூபாய் ஒதுக்கி இந்த சமுதாய நலக்கூடம் கட்டிக்கொடுக்கப்பட்டது.
கடந்த 2016ம் ஆண்டு பணிகள் முடிந்தது. ஆனாலும் இன்று வரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
இதனால் அப்பகுதிமக்கள் வேறு வழியின்றி அதிக தொகை கொடுத்து தனியார் மண்டபங்களில் தங்களது இல்ல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
பொருளாதார ரீதியாக இது அவர்களை நிலைகுலைய செய்துள்ளது. எந்த நோக்கத்திற்காக சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறாமல் பாழாகி வருகிறது.
அரசின் நிதி பல லட்சம் ரூபாய் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்து, சமுதாய நலக்கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.