/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கூனிச்சம்பட்டில் நாளை மக்கள் குறைத்தீர்வு முகாம் கூனிச்சம்பட்டில் நாளை மக்கள் குறைத்தீர்வு முகாம்
கூனிச்சம்பட்டில் நாளை மக்கள் குறைத்தீர்வு முகாம்
கூனிச்சம்பட்டில் நாளை மக்கள் குறைத்தீர்வு முகாம்
கூனிச்சம்பட்டில் நாளை மக்கள் குறைத்தீர்வு முகாம்
ADDED : ஜூலை 05, 2024 06:32 AM
திருக்கனுார் : கூனிச்சம்பட்டில் மக்கள் குறை தீர்வு முகாம் நாளை நடக்கிறது.
வில்லியனுார் சப் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொது மக்களின் நலன் கருதி 'மக்கள் குறைத்தீர்ப்பு முகாம்' நாளை 6ம் தேதி நடக்கிறது. கூனிச்சம்பட்டு அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் முகாமில் திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை மூலம் புதிய ஆதார் பதிவு செய்தல், பழைய ஆதாரில் உள்ள பெயர், முகவரி, மொபைல் எண் மற்றும் இதர சேவைகள் அரசு கட்டணத்துடன் திருத்தம் போன்ற சேவைகள் நடைபெறும்.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் பொது மக்களின் வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கு செலுத்த வேண்டிய வரி அனைத்தும் வசூல் செய்யப்படும்.
பொதுமக்கள் தங்களின் உடல் நலம் சம்பந்தமான குறைகள் ஏதேனும் இருப்பின் முகாமில் பங்கேற்கும் திருக்கனுார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரை அணுகி நலம் பெறலாம். மத்திய அரசு மூலம் வழங்கப்படும் பல்வேறு கடன்கள், காப்பீடுகள் மற்றும் இதர சேவைகள் முகாமில் பங்கேற்கும் இந்தியன் வங்கி மேலாளரை அணுகி சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.
பொது மக்களுக்கு சட்டத்தின் மூலம் பெற வேண்டிய அனைத்து சேவைகளின் ஆலோசனைகள் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களின் குறைகளை நேரடியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.