/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குறைந்த மின் அழுத்த பிரச்னை சேலியமேட்டில் மக்கள் அவதி குறைந்த மின் அழுத்த பிரச்னை சேலியமேட்டில் மக்கள் அவதி
குறைந்த மின் அழுத்த பிரச்னை சேலியமேட்டில் மக்கள் அவதி
குறைந்த மின் அழுத்த பிரச்னை சேலியமேட்டில் மக்கள் அவதி
குறைந்த மின் அழுத்த பிரச்னை சேலியமேட்டில் மக்கள் அவதி
ADDED : ஜூலை 08, 2024 04:07 AM
பாகூர்: சேலியமேடு கிராமத்தில் குறைந்த மின் அழுத்த பிரச்னை இருந்து வருவதால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஏம்பலம் தொகுதி சேலியமேடு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, மின் அழுத்தம் குறைபாடு காரணமாக நீண்ட நாட்களாக அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, புதியதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதிலிருந்து, 160 முதல் 180 வோல்ட் வரை மட்டுமே மின்சாரம் விநியோகமாகி வருகிறது. இதனால், பலரது வீடுகளில் உள்ள மின் விசிறி, டி.வி., மிக்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதாகி வருவது தொடர் கதையாக உள்ளது.
இரவு நேரங்களில் மின் அழுத்தம் மேலும் குறைந்து மின் விசிறிகள் சுழல முடியாமல் நின்று விடுகிறது.
தற்போது, கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் இரவு நேரங்களில் துாக்கம் இழந்து குழந்தைகள், முதியவர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் சரியான துாக்கம் இல்லாமல் பள்ளி செல்லும் மாணவர்கள் வகுப்பறையிலும், தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களிலும் தங்களை மீறி துாங்கி விடுகின்றனர்.
சேலியமேடு உட்புற வீதிகளான ஆஞ்சநேயர் கோவில் வீதி, ராஜா வீதி, வாணிதாசனார் வீதி உள்ளிட்ட வீதிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மின் கம்பிகள் சீரமைக்கப்படாமல், ஜம்பர் இணைப்புகள் பல இடங்களில் துண்டாகி உள்ளது.
இது குறித்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.