/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'கொப்பளிக்கும் பாதாள சாக்கடை மேன்ஹோல்கள்' நோயாளிகள், உதவியாளர்கள் கடும் அவதி 'கொப்பளிக்கும் பாதாள சாக்கடை மேன்ஹோல்கள்' நோயாளிகள், உதவியாளர்கள் கடும் அவதி
'கொப்பளிக்கும் பாதாள சாக்கடை மேன்ஹோல்கள்' நோயாளிகள், உதவியாளர்கள் கடும் அவதி
'கொப்பளிக்கும் பாதாள சாக்கடை மேன்ஹோல்கள்' நோயாளிகள், உதவியாளர்கள் கடும் அவதி
'கொப்பளிக்கும் பாதாள சாக்கடை மேன்ஹோல்கள்' நோயாளிகள், உதவியாளர்கள் கடும் அவதி
ADDED : ஜூன் 19, 2024 05:24 AM

புதுச்சேரி : மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை அருகே 'கொப்பளிக்கும் பாதாள சாக்டையால்' நோயாளிகள் மற்றும் உதவியாளர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புது நகரில் பாதாள சாக்கடையில்உருவான விஷவாயு தாக்கி சிறுமி உட்பட 3பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில், எல்லைப்பிள்ளைச்சாவடி, ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை தெற்கு பக்க சுவர் ஓரமாக, சாரதாம்பாள் நகர், தந்தை பெரியார் நகருக்கு செல்லும் பாதையில் பாதாள சாக்கடை மேன்ஹோல்கள் வரிசையாக உள்ளது.
இதில் 3 மேன்ஹோல்களில் இருந்து பாதாள சாக்கடை கழிவுநீர் கொப்பளித்து வெளியே வருகிறது. இவை சாலையில் வழிந்தோடுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் சாலையோரம் உள்ள மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் காத்திருக்கும் உதவியாளர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.