/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளி கேட்டை பூட்டி பெற்றோா் மாணவர்கள் போராட்டம் அரசு பள்ளி கேட்டை பூட்டி பெற்றோா் மாணவர்கள் போராட்டம்
அரசு பள்ளி கேட்டை பூட்டி பெற்றோா் மாணவர்கள் போராட்டம்
அரசு பள்ளி கேட்டை பூட்டி பெற்றோா் மாணவர்கள் போராட்டம்
அரசு பள்ளி கேட்டை பூட்டி பெற்றோா் மாணவர்கள் போராட்டம்
ADDED : ஜூன் 20, 2024 03:39 AM

திருக்கனுார் : தேத்தாம்பாக்கம் அரசு துவக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து, நுழைவு வாயிலை பூட்டி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மண்ணாடிப்பட்டு தொகுதி தேத்தாம்பாக்கத்தில் அரசு துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் எல்.கே.ஜி ., முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு, தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பள்ளியில் போதுமான அளவிற்கு கட்டட வசதி இல்லாததால் ஒரே ஒரு வகுப்பறையில் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பழுதடைந்த கட்டடத்தால் மழை காலங்களில் தண்ணீர் வகுப்பறைக்குள் வருவதால், மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பள்ளிக்கு புதிய கட்டடம், அடிப்படை வசதிகளை செய்து தர பலமுறை கல்வித் துறையிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் இளைஞர்கள் நேற்று காலை 8:30 மணி அளவில் பள்ளி வகுப்பறையில் இருந்தமாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு பள்ளியின் நுழைவு வாயில் இரும்பு கேட்டிற்குபூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி மோகன், வட்ட துணை ஆய்வாளர் சொக்கலிங்கம், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், முதன்மை கல்வி அதிகாரி மோகன்,பள்ளி கட்டடம் பழுதமடைந்துள்ளதால், தற்காலிகமாக அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை செய்து, மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும், புதிய கட்டடம் குறித்து மேல் அதிகாரிகளுடன் கலந்து பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அதன் பேரில் பெற்றோர் மற்றும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.