/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விபத்தில் சிக்குவோரின் ரத்தத்தில் ஆல்கஹால் மதிப்பீடு செய்ய உத்தரவு விபத்தில் சிக்குவோரின் ரத்தத்தில் ஆல்கஹால் மதிப்பீடு செய்ய உத்தரவு
விபத்தில் சிக்குவோரின் ரத்தத்தில் ஆல்கஹால் மதிப்பீடு செய்ய உத்தரவு
விபத்தில் சிக்குவோரின் ரத்தத்தில் ஆல்கஹால் மதிப்பீடு செய்ய உத்தரவு
விபத்தில் சிக்குவோரின் ரத்தத்தில் ஆல்கஹால் மதிப்பீடு செய்ய உத்தரவு
ADDED : ஜூன் 26, 2024 01:56 AM
புதுச்சேரி : விபத்தில் சிக்கிய காயமடைந்தோரின் ரத்தத்தில் ஆல்கஹால் அளவை மதிப்பீடு செய்ய அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு அனைத்து மருத்துமனைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, விபத்தில் சிக்கிய காயமடைந்தோர், வரும் வழியில் இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும்போது, ரத்தத்தில் ஆல்கஹால் உள்ளதா என, அதன் அளவை மதிப்பீடு செய்து குறிப்பிட வேண்டும்.
நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் மற்றும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் வழக்குகள் அதிகரித்துள்ளதால் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நீதிமன்ற அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.