/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'மாநில அந்தஸ்தை பெறாவிட்டால் முதல்வர் தோல்வியுற்றவராவார்' எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சு 'மாநில அந்தஸ்தை பெறாவிட்டால் முதல்வர் தோல்வியுற்றவராவார்' எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சு
'மாநில அந்தஸ்தை பெறாவிட்டால் முதல்வர் தோல்வியுற்றவராவார்' எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சு
'மாநில அந்தஸ்தை பெறாவிட்டால் முதல்வர் தோல்வியுற்றவராவார்' எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சு
'மாநில அந்தஸ்தை பெறாவிட்டால் முதல்வர் தோல்வியுற்றவராவார்' எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சு
ADDED : மார் 14, 2025 04:27 AM
புதுச்சேரி: கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசியதாவது:
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான உரையாக கவர்னர் உரை இருக்கும் என, எதிர்பார்த்தோம். ஆனால் இதற்கு முந்தைய கவர்னர்கள் முன் வைத்த உரையை போல இந்த அரசின் செயலின்மையை மூடி மறைக்கும் வழக்கமான உரையாகவே தெரிகிறது. பெஸ்ட் புதுச்சேரிக்கு ரூ. 2,000 கோடி தருவதாக மத்திய அரசு சொல்லியும் அதை பெற முயற்சி எடுக்காதது ஏன்.
இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து சட்டசபை கட்டடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டதாகவும், மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதுபற்றி உரையில் எதுவும் குறிப்பிடவில்லை.
சிறப்புக்கூறு திட்டத்தில் 2024-25ம் ஆண்டில் ரூ. 508 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 பெண்கள் கடை வைத்து பிழைக்க கடனுதவி செய்யப்பட்டுள்ளதா என்றால் இல்லை.
ஆதிதிராவிடர் நலத்துறையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், சிறப்புக்கூறு நிதி செலவினங்கள் குறித்தும் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சர்வதேச கடல் எல்லை கோட்டை கடப்பதால் ஏற்படும் சிக்கலைத் தீர்க்க ஆறு ஆழ்கடல் மீன்பிடி படகுகளை பெண்களுக்கு வழங்குவதாக குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் மீனவர்களை அந்தமான் கடல் பகுதிக்கு செல்ல ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இது எப்படி சாத்தியம்.
முதல்வர் ரங்கசாமி மாநில அந்தஸ்தை வலியுறுத்தி டில்லிக்கு செல்லவில்லை. அனைவரையும் அழைத்து செல்லாவிட்டாலும் அமைச்சர்களையாவது அழைத்து சென்றிருக்கலாம். நல்வாய்ப்பு இருந்தும் இந்த கோரிக்கையை செயல்படுத்தாவிட்டால் முழுமையாக தோற்ற அரசியல்வாதியாகத் தான் தெரிவீர்கள்.
கவர்னர் நீண்ட அனுபவம் உள்ளவர். வாங்கிய கடன் தள்ளுபடியோ, புது கணக்கு துவங்கும் முன் உள்ள கடனை தள்ளுபடி செய்ய சொல்லுங்கள். மாநில அந்தஸ்து கிடைக்கவும், நிதிக்குழுவில் சேர்ப்பு, கடன் தள்ளுபடி ஆகியவற்றிற்கு முயற்சி எடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.