ADDED : மே 10, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: இருந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் வெள்ளிமலை. இவர், கடந்த 5 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி வல்லாத்தம்மாள், 58; கணவர் இறந்ததால் மன உளைச்சலில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தவர்கள் துாங்க சென்ற நிலையில், வல்லாத்தம்மாள் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
