ADDED : ஜூன் 04, 2024 11:51 PM
அரியாங்குப்பம்,: பொது இடத்தில் நின்று கொண்டு ஆபாசமாக பேசிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தவளக்குப்பம் சந்திப்பில், இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டு அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.
அதையடுத்து, போலீசார் அங்கு நின்ற வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அதில், கடலுார் மாவட்டம், சின்னகாட்டுபாளையத்தை சேர்ந்த வினோத்குமார், 25; கொருக்கன்மேட்டை சேர்ந்த ராஜா, 20 ; என தெரியவந்தது. போலீசார் இருவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.