Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் விரிசல் பா.ஜ., மேலிட பார்வையாளர் புதுச்சேரி வருகை

என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் விரிசல் பா.ஜ., மேலிட பார்வையாளர் புதுச்சேரி வருகை

என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் விரிசல் பா.ஜ., மேலிட பார்வையாளர் புதுச்சேரி வருகை

என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் விரிசல் பா.ஜ., மேலிட பார்வையாளர் புதுச்சேரி வருகை

ADDED : ஜூலை 08, 2024 04:20 AM


Google News
புதுச்சேரி: என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பா.ஜ., மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா இன்று புதுச்சேரி வர உள்ளார்.

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியை தழுவினார். முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் கள் செயல்பாடுகளால் தான் லோக்சபா தேர்தலில் தோல்வியடைய நேரிட்டது என, பா.ஜ., எம்.எல். ஏ.,க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களை தான் முதல்வர் அரவணைக்கிறார். என்.ஆர்.காங்., கூட்டணிக்கான ஆதரவை விலக்கி கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் டில்லி சென்ற பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் இது தொடர்பாக பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷை சந்தித்து முறையிட்டனர்.

லோக்சபா தேர்தல் தோல்வியால், புதுச்சேரி யில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இப்பிரச்னையை பேசி தீர்க்க, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உத்தரவின்பேரில் அக்கட்சியின் மேலிட பார்வையாளராக நிர்மல்குமார் சுரானா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர், இன்று (8ம் தேதி) புதுச்சேரி வர உள்ளார். காலை 10:00 மணிக்கு ஓட்டல் அக்கார்ட்டில் பா.ஜ., தலைவர் செல்வகணபதி, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து முதல்வர், அமைச்சர்களுக்கு எதி ராக போர்க்கொடி உயர்த்தி யுள்ள பா.ஜ., எம்.எல். ஏ.,க்களை சந்தித்து அவர்களுடைய கருத்துகளையும் கேட்டறிய உள்ளார். அதனை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி, கட்சியின் மேலிடத்திற்கு தகவல் சொல்ல உள்ளார்.

ஆளும் என்.ஆர்.காங்., -பா.ஜ., ஆட்சியின் மீது கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது. பல துறைகளில் ஊழல் மலிந்துள்ளது, இப்படியே போனால் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விற்கு பெரும் பின்னடைவு தான் ஏற்படும்.

அதனால் தற்போது இருக்கும் பா.ஜ., அமைச்சர்களை மாற்றிவிட்டு, சுழற்சி முறையில் எங்களுக்குப் பதவி வேண்டும் என்று பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், பா.ஜ., மேலிட பார்வையாளர் வருகை புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us