/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சொந்த தொகுதியில் சறுக்கிய நமச்சிவாயம் சொந்த தொகுதியில் சறுக்கிய நமச்சிவாயம்
சொந்த தொகுதியில் சறுக்கிய நமச்சிவாயம்
சொந்த தொகுதியில் சறுக்கிய நமச்சிவாயம்
சொந்த தொகுதியில் சறுக்கிய நமச்சிவாயம்
ADDED : ஜூன் 05, 2024 12:30 AM
புதுச்சேரி: பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு அவரது சொந்த தொகுதியிலேயே ஓட்டுகள் குறைந்துள்ளதால் அக்கட்சியின் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம், கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, 14,939 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். மண்ணாடிப்பட்டு தொகுதி நமச்சிவாயத்தின் கோட்டை என வர்ணிக்கப்பட்டது. அந்த அளவுக்கு அமைச்சர் நமச்சிவாயத்திற்கு செல்வாக்கு இருந்தது.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டது. இதில், முதல் சுற்றில் மண்ணாடிப்பட்டு தொகுதி ஓட்டுகள் எண்ணப்பட்டது. நமச்சிவாயம் மொத்தம் 12,007 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். கடந்த சட்டசபை தேர்தலில் பெற்ற ஓட்டுகளைவிட 2936 ஓட்டுகள் குறைவாகும்.
இந்த தொகுதியில் மட்டும் அமைச்சர் நமச்சிவாயம், காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தைவிட 986 ஓட்டுகள் குறைவாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.