/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டி டைகர்ஸ், ஷார்க்ஸ் அணிகள் வெற்றி ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டி டைகர்ஸ், ஷார்க்ஸ் அணிகள் வெற்றி
ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டி டைகர்ஸ், ஷார்க்ஸ் அணிகள் வெற்றி
ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டி டைகர்ஸ், ஷார்க்ஸ் அணிகள் வெற்றி
ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டி டைகர்ஸ், ஷார்க்ஸ் அணிகள் வெற்றி
ADDED : ஜூலை 10, 2024 04:30 AM

புதுச்சேரி : புதுச்சேரியில், ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டியில், டைகர்ஸ் மற்றும் ஷார்க்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் டி.சி.எம் நிறுவனம் சார்பில், 6 அணிகள் மோதும், 20 ஓவர் ஆண்கள் கிரிக்கெட் போட்டி, சி.ஏ.பி.சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று காலை 8:00 மணிக்கு நடந்த போட்டியில் புல்ஸ் மற்றும் டைகர்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த, புல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து, 211 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக புல்ஸ் அணியின் ராகவன், 35 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய டைகர்ஸ் அணி, 17.5 ஓவர் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து, 212 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஹர்ஷ் வைஷ்ணவ், 34 பந்துகளில் 97 ரன்கள் குவித்து, ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
மதியம் 12:30 மணிக்கு நடந்த போட்டியில், ஷார்க்ஸ் மற்றும் பந்தர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஷார்க்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. அந்த அணியின் நேயன் ஷ்யாம் காங்கயன், 42 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய பந்தர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து, 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்தர்ஸ் அணியின் சாய் ஹரிராம், 35 பந்துகளில் 66 ரன்கள் அடித்தார். இதில், ஷார்க்ஸ் அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், 17 பந்துகளில், 53 ரன்கள் குவித்து, வெற்றிக்கு வித்திட்ட ஷார்க்ஸ் அணியின் அக் ஷாந்திற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.