/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வைத்திக்குப்பம் கடற்கரையில் இன்று மாசி மக தீர்த்தவாரி வைத்திக்குப்பம் கடற்கரையில் இன்று மாசி மக தீர்த்தவாரி
வைத்திக்குப்பம் கடற்கரையில் இன்று மாசி மக தீர்த்தவாரி
வைத்திக்குப்பம் கடற்கரையில் இன்று மாசி மக தீர்த்தவாரி
வைத்திக்குப்பம் கடற்கரையில் இன்று மாசி மக தீர்த்தவாரி
ADDED : மார் 14, 2025 04:31 AM
புதுச்சேரி: வைத்திக்குப்பம் கடற்கரையில், மாசி மக தீர்த்தவாரி இன்று நடக்கிறது.
மயிலம் முருகர், செஞ்சி ரங்கநாதர், தீவனுார் விநாயகர் உட்பட புதுச்சேரியில் பல்வேறு பகுதி் கோவில்களில் இருந்து உற்சவர் சாமிகள் தீர்த்த வாரியில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். கடற்கரைக்கு வரும் சுவாமிகளுக்கு புதுச்சேரியில், பல இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தீர்த்தவாரி நிகழ்ச்சியை காண, புதுச்சேரி மட்டும் இல்லாமல் கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
மேலும், கடற்கரையில் மக்கள் அதிக அளவில் கூடுவர் என்பதால், கடலோர பாதுகாப்பு படை மற்றும் மீனவர்கள் படகுகள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.