/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மரக்காணம் சாராய வியாபாரி கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கைது மரக்காணம் சாராய வியாபாரி கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கைது
மரக்காணம் சாராய வியாபாரி கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கைது
மரக்காணம் சாராய வியாபாரி கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கைது
மரக்காணம் சாராய வியாபாரி கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கைது
ADDED : ஜூன் 22, 2024 04:08 AM
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் மரக்காணத்தைச் சேர்ந்த பிரபல சாராய வியாபாரி உட்பட 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தமிழகத்தை உலுக்கியுள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து ஏ.டி.எஸ்.பி., கோமதி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில் நேற்று முன்தினம் கருணாபுரம் கண்ணுக்குட்டி(எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமேதரன், சேஷசமுத்திரம் சின்னதுரை ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், கடந்தாண்டு மே மாதம் 14 பேரை பலி வாங்கிய மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் தொடர்புடைய பிரபல சாராய வியாபாரி நரிப்பாளையம் முருகன் மகன் மதன், 27; என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், மரக்காணம் வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதான நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஜாமினில் வந்தது, கள்ளக்குறிச்சியில் சாராயம் விற்று வந்தது தெரிய வந்தது.
அதனையொட்டி கள்ளச்சாராயம் விற்ற மதன், ரங்கநாதபுரம் சக்கரவர்த்தி மனைவி சந்திரா, 32; விரியூர் லுார்துசாமி மகன் ரமேஷ், 40; சின்னப்பன் மகன் சூசைநாதன், 40; ஆகியோரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்தனர்.