Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கத்தியுடன் பதுங்கியிருந்த பேர் கைது

கத்தியுடன் பதுங்கியிருந்த பேர் கைது

கத்தியுடன் பதுங்கியிருந்த பேர் கைது

கத்தியுடன் பதுங்கியிருந்த பேர் கைது

ADDED : மார் 15, 2025 06:27 AM


Google News
புதுச்சேரி: கோரிமேடு பகுதியில் கத்தியுடன் பதுங்கி இருந்த 3 பேரை போலீ சார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் கனரக வாகன முனையத்தில் 2 பேர் பயங்கர ஆயுங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று, காஸ் குடோன் அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

ஜீவானந்தபுரம் வாஞ்சிநாதன் வீதி ஜானகிராமன் மகன் சோனி (எ) அருண், 31; சாரம், சக்தி நகர் நெடுஞ்செழியன் மகன் முரளி (எ) கருப்பு முரளி, 33; என தெரியவந்தது.

இருவரிடம் நடத்திய சோதனையில், 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்தனர். சோனி மீது 2 கொலை, வழிப்பறி வழக்குகள், முரளி மீது கொலை, அடிதடி வழக்குகள் உள்ளன.

இதேபோல், லாஸ்பேட்டை, தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அருகே கத்தியுடன் பதுங்கி இருந்த புதுச்சேரி, அய்யனார் கோவில் நகரை சேர்ந்த ரத்தனம், 24; என்பவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

மூவரையும் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us