/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கறவை மாடுகளுக்கு அதிநவீன கருவூட்டல் திட்டம் துவக்கம்: முழு செலவையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்பு கறவை மாடுகளுக்கு அதிநவீன கருவூட்டல் திட்டம் துவக்கம்: முழு செலவையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்பு
கறவை மாடுகளுக்கு அதிநவீன கருவூட்டல் திட்டம் துவக்கம்: முழு செலவையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்பு
கறவை மாடுகளுக்கு அதிநவீன கருவூட்டல் திட்டம் துவக்கம்: முழு செலவையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்பு
கறவை மாடுகளுக்கு அதிநவீன கருவூட்டல் திட்டம் துவக்கம்: முழு செலவையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்பு

வாடகை தாய்
இதன்படி, உயர்ரக, கலப்பின, பாலினம் பிரிக்கப்பட்ட கருக்களை கொண்டு செயற்கை கருவூட்டல் முறையில் பெண் கன்றுகளை ஈனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தினசரி 25 லிட்டர், 30 லிட்டர் என அதிகமாக பால் தரும் உயர் ரக பசுக்களின் கரு முட்டைகள் சேகரிக்கப்படும்.
ஐதராபாத் ஆய்வகம்
'இன் விட்ரோ பெர்டிலைசேஷன்' (ஐ.வி.எப்.,) எனப்படும் இந்த அதிநவீன கருவூட்டல் திட்டத்தின் கீழ், ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்தில் கரு முட்டைகளும், விந்தணுவும் சேர்க்கப்பட்டு கரு உருவாக்கப்படுகிறது. இந்த உயர்ரக கருக்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு, விமானம் மூலமாக சென்னைக்கு எடுத்து வரப்படும்.
100 சதவீத மானியம்
ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ஐ.வி.எப்., அதிநவீன கருவூட்டல் திட்டத்தின் செயற்கை கருவூட்டல் ஒன்றுக்கு 21 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதில், மத்திய அரசின் பங்காக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
அமைச்சர் துவக்கி வைப்பு
ஐ.வி.எப்., அதிநவீன கருவூட்டல் திட்டத்தின் துவக்க விழா மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை தாங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். விழாவில் துறை செயலர் ராஜூ, இயக்குனர் லதா மங்கேஷ்கர், திட்ட அதிகாரி குமரன், டாக்டர்கள் அனந்தராமன், மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.