/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாசவி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு வாசவி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
வாசவி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
வாசவி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
வாசவி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூலை 07, 2024 03:56 AM

புதுச்சேரி: ஆரிய வைசிய சபா சார்பில், வாசவி இன்டர் நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
முத்தியால்பேட்டை வாசவி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
மேலும், தனி பாடப்பிரிவில் நுாறு சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், பூமா வைசியா தலைவர் தயானந்தகுப்தா தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக ஆரிய வைசிய சமூகத்தின் தலைவர் வேணுகோபால் சிறப்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில், பூமா வைசியா நிர்வாகிகள் பிரகாசம், சற்குருநாதன், ஸ்ரீதரன், அருண், விக்ரம், பாஸ்கர், சீனிவாசன் உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.