ADDED : ஜூன் 20, 2024 03:37 AM

புதுச்சேரி : அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு, காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்.
காமராஜர் நகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ஸ்ரீமதி. இவர், அதே பகுதியில் உள்ள, எஸ்.ஆர்.சுப்பிரமணியன் அரசு பள்ளியில் 10ம் வகுப்பில்முதல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்.
இந்த நிலையில், புதுச்சேரி மாநில காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், மாணவி ஸ்ரீமதியின் வீட்டுக்கு சென்று பாராட்டு தெரிவித்தார். மேலும், மாணவிக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிகழ்வில் காங்., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.