/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கன்னியக்கோவிலில் கோவிலாங்குளம் ஆக்கிரமிப்பு கன்னியக்கோவிலில் கோவிலாங்குளம் ஆக்கிரமிப்பு
கன்னியக்கோவிலில் கோவிலாங்குளம் ஆக்கிரமிப்பு
கன்னியக்கோவிலில் கோவிலாங்குளம் ஆக்கிரமிப்பு
கன்னியக்கோவிலில் கோவிலாங்குளம் ஆக்கிரமிப்பு
ADDED : ஜூன் 04, 2024 04:16 AM

பாகூர், : கன்னியக்கோவில் கிராமத்தில் மண் கொட்டி மூடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவிலாங் குளத்தை மீட்டெடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாகூர் தொகுதிக்குட்பட்ட கன்னியக்கோவில் கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் உள்ளது.
இந்த நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் கண்டு கொள்ளாமல் விடப்பட்டதால், நாளடைவில் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது. ஏற்கனவே, இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் காணாமல் போன நீர்நிலைகளை மீட்டு தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், கன்னியக்கோவில் மாரியம்மன் கோவில் தெற்கு பகுதியில் உள்ள சுமார் 2 ஏக்கர் பரப்பளவிலான கோவிலாங்குளத்தின் தெற்கு கரை பகுதியையொட்டி உள்ள மனை பிரிவு உரிமையாளர்கள், கரையை சேதப்படுத்தி குளத்தில் மண் கொட்டி ஆக்கிரமித்து வருகின்றனர்.
தற்போது, எல்லை கல்லை தாண்டி சுமார் 6 அடி நீளத்திற்கு குளத்தில் மண் கொட்டி மூடப்பட்டுள்ளது. இது கண்டு கொள்ளாமல் விடப்பட்டால், நாளடைவில் இந்த குளம் முழுதும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி மறைந்து விடும் நிலை ஏற்படும்.
ஏற்கனவே இது குறித்து கவர்னர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ள நிலையில், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கன்னியக்கோவில் கோவிலாங் குளத்தை துார்வாரி மீட்டெடுத்து, ஆக்கிரமிப்பு நடைபெறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.