ADDED : ஜூலை 18, 2024 11:05 PM
வில்லியனுார்: வில்லியனுார் அருகே சுடுகாட்டு சாலையில் கத்தியுடன் திரிந்த ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வில்லியனுார் அருகே உள்ள கூடப்பாக்கம் சுடுகாடு சாலையில் மர்ம நபர் கத்தியுடன் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வில்லியனுார் போலீசார்குற்றநோக்கத்தோடு கத்தியுடன் நின்றிருந்த நபரை பிடித்து ஸ்டேஷன் கொண்டு சென்றனர்.
போலீசார் விசாரணையில் அவர் கூடப்பாக்கம் அம்பேத்கர் வீதியை சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் அன்பு (எ) அன்பரசன்,35; என தெரியவந்ததது. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிந்தது. அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.