/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின் கட்டணத்தை தொடர்ந்து நிரந்தர கட்டணமும் 'கிடுகிடு' மின்துறை கொடுக்கிறது 'ஷாக்': பொதுமக்கள் அதிர்ச்சி மின் கட்டணத்தை தொடர்ந்து நிரந்தர கட்டணமும் 'கிடுகிடு' மின்துறை கொடுக்கிறது 'ஷாக்': பொதுமக்கள் அதிர்ச்சி
மின் கட்டணத்தை தொடர்ந்து நிரந்தர கட்டணமும் 'கிடுகிடு' மின்துறை கொடுக்கிறது 'ஷாக்': பொதுமக்கள் அதிர்ச்சி
மின் கட்டணத்தை தொடர்ந்து நிரந்தர கட்டணமும் 'கிடுகிடு' மின்துறை கொடுக்கிறது 'ஷாக்': பொதுமக்கள் அதிர்ச்சி
மின் கட்டணத்தை தொடர்ந்து நிரந்தர கட்டணமும் 'கிடுகிடு' மின்துறை கொடுக்கிறது 'ஷாக்': பொதுமக்கள் அதிர்ச்சி
ADDED : ஜூன் 16, 2024 05:47 AM

வீடு, தொழிற்சாலைகளுக்கான மாதாந்திர பயன்பாட்டு மின் கட்டணம் மட்டுமின்றி, நிரந்தர கட்டணமும் பல மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மாதாந்திர மின் கட்டணம் மட்டுமின்றி, மின் விலை ஈடுகட்டுதல், சர்ஜ் சார்ஜ் எனப்படும் கூடுதல் கட்டணம், நிரந்தர சேவை கட்டணம், காலதாமத கட்டணம், சேவை கட்டணம் உள்ளிட்ட விதவிதமான கட்டணங்களும் நுகர்வோர் தலையில் கட்டப்படுகிறது.
புதுச்சேரியில் வீடு, தொழிற்சாலைகளுக்கான பயன்பாட்டு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம், சத்தமில்லாமல் பிக்ஸடு சார்ஜ் எனப்படும் நிரந்தர கட்டணத்தையும் பலமடங்காக உயர்த்தியுள்ளது. வீடுகளுக்கு கிலோ வாட்டிற்கு 30 ரூபாயாக இருந்த நிரந்தர சேவை கட்டணம், 35 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிறுவனங்கள்
வர்த்தக நிறுவனங்களுக்கு 75 ரூபாயாக இருந்த நிரந்தர சேவை கட்டணம் 75 ரூபாயில் இருந்து, 200 ரூபாயாக பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்களில் உயர் மின்னழுத்த இணைப்பிற்கு கிலோவோல்டு ஆம்பியருக்கு வசூலிக்கப்பட்டு வந்த 420 ரூபாய் நிரந்தர கட்டணம், 450 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளும் தப்பவில்லை
சிறிய விவசாயிகளுக்கு எச்.பி.,க்கு வசூலிக்கப்பட்டு வந்த பிக்ஸடு சார்ஜ் 20 ரூபாயில் இருந்து 25 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே வேளையில் மற்ற விவசாயிகளுக்கான பிக்ஸடு சார்ஜ் 75 ரூபாயில் இருந்து, 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள்
குறைந்த மின்னழுத்த தொழிற்சாலைக்கான நிரந்தர கட்டணம் 50 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல், 11 கே.வி., 22 கே.வி., அல்லது 33 கே.வி., இணைப்பினை பெற்றுள்ள எச்.டி., தொழிற்சாலைளுக்கான நிரந்தர கட்டணம் 420 ரூபாயில் இருந்து 450 ரூபாய்க்கும், 110 கேவி.,132 கே.வி., மின் இணைப்புகளை பெற்றுள்ள இ.எச்.டி.,தொழிற்சாலைகளுக்காக நிரந்தர கட்டணம் 480 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
குறைந்த மின்னழுத்த குடிநீர் பணிக்கான நிரந்தர கட்டணம் 150 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், எச்.டி., இதர இணைப்பிற்கான நிரந்தர கட்டணம் 480 ரூபாய் இருந்து 500 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை, இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் வெளியிட்டுள்ளது.