/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காசி விசுவநாதர் கோவில் கும்பாபிேஷக விழா காசி விசுவநாதர் கோவில் கும்பாபிேஷக விழா
காசி விசுவநாதர் கோவில் கும்பாபிேஷக விழா
காசி விசுவநாதர் கோவில் கும்பாபிேஷக விழா
காசி விசுவநாதர் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : ஜூன் 14, 2024 06:14 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை காசி விசுவநாதர் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகர் திருவள்ளுவர் வீதியில் காசி விசாலாட்சி அம்மை உடனுறை காசி விசுவநாதர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இக்கோவில் கும்பாபிேஷக விழாவையொட்டி நேற்று அதிகாலை 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, தொடர்ந்து நான்காம் கால வேள்வி பூஜை நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் கருவறை விமானங்கள், மூலவ மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் ரங்க சாமி, சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் ராமலிங்கம், செயலாளர் பழனியப்பன், பொருளாளர் நடராஜன், துணைத் தலைவர் இளங்கோ திருநாவளவன், துணை செயலாளர் தவமணி, துணைப் பொருளாளர் சண்முகம், திருப்பணி ஆலோசகர் தணிகாசலம் செய்திருந்தனர்.