Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இலக்கிய கழகம் சார்பில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா

இலக்கிய கழகம் சார்பில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா

இலக்கிய கழகம் சார்பில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா

இலக்கிய கழகம் சார்பில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா

ADDED : ஜூன் 25, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி, : புதுச்சேரி கண்ணதாசன் இலக்கிய கழகம் சார்பில், கழகத்தின் 12வது ஆண்டு விழா மற்றும் கண்ணதாசன் 97வது பிறந்தநாள் விழா ஜெயராம் ஓட்டலில் நடந்தது.

இலக்கிய கழகத் தலைவர் தேவதாசு தலைமை தாங்கினார். செயலர் அருள்செல்வம் வரவேற்றார். துணைத் தலைவர் கோதண்டராமன், பொருளாளர் வீரட்டீசுவரன், செயற்குழு உறுப்பினர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக நிறுவனர் கோவிந்தராசு துவக்க உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக புதுச்சேரி நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, கண்ணதாசன் விருதினை வழங்க, அதனை முன்னாள் எம்.பி., திருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார்.

விழாவில் முனைவர்கள் ராமதாசுகாந்தி, கனகராசு, பூங்குழலி, மதன்குமார், கலைவாணி, தாமோதரன் ஆகியோர்களுக்கு தமிழ்பணிச் செம்மல் விருது வழங்கப்பட்டது.

கழகத் துணைத் தலைவர் செந்தில்குமார் விருதாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். கோமதி, தனுஸ்ரீ, சமன்ராஜ் ஆகியோர் கவிதை வாசித்தனர்.

பேராசிரியர் அப்துல்காதர் சிறப்புரையாற்றினார். கலைவாணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஏற்பாடுகளை ஆளவந்தார் சித்தன், பதம்நாபன், குமரவேலு ஆகியோர் செய்திருந்தனர்.கழகச் இணைச் செயலாளர் கஜேந்திரன் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us