/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காங்., சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா காங்., சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
காங்., சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
காங்., சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
காங்., சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
ADDED : ஜூலை 16, 2024 05:09 AM

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதி காங்., சார்பில் 122வது காமராஜர் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது.
காங்., கமிட்டி ஒருங்கிணைப்பாளரும், காமராஜர் நகர் தொகுதி பொறுப்பாளருமான தேவதாஸ் தலைமை தாங்கினார்.
விழாவில், மாநில காங்., தலைவர் வைத்தி லிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு காமராஜர் திருவுருவப்படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், புதுச்சேரி மாநில நிர்வாகிகள், காமராஜர் தொகுதி மாநில, மாவட்ட, வட்டார, சிறப்பு அழைப்பாளர்கள், மகளிர், இளைஞர், மாணவர் காங்., உள்ளிட்ட அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை காமராஜர் நகர் தொகுதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.