/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உருளையன்பேட்டை கோவிலில் நகை, பணம் திருட்டு உருளையன்பேட்டை கோவிலில் நகை, பணம் திருட்டு
உருளையன்பேட்டை கோவிலில் நகை, பணம் திருட்டு
உருளையன்பேட்டை கோவிலில் நகை, பணம் திருட்டு
உருளையன்பேட்டை கோவிலில் நகை, பணம் திருட்டு
ADDED : ஜூன் 02, 2024 05:10 AM

புதுச்சேரி: உருளையன்பேட்டை உலக நாயகி அம்மன் கோவிலில், நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி, உருளையன்பேட்டை புதிய பஸ் நிலையம் எதிரே உலக நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலை நேற்று காலை வழக்கம் போல் நிர்வாகி திறந்தார். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் மற்றும் அம்மன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.
புகாரின் பேரில் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கிட்லா சத்ய நாராயணன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர்.
உருளையன்பேட்டையில் கடந்த 6 மாதத்தில், 4 கோவில்களில் ் உண்டியல் உடைக்கப்பட்டு பணம், சாமி சிலைகளில் இருந்த நகைகள் திருடப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், 5வது கோவிலாக, உலக நாயகி அம்மன் கோவிலில் திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியள்ளது.