/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மொபைல் போனில் பேசியபடியே இறந்த கிடந்த ஐ.டி., ஊழியர் மொபைல் போனில் பேசியபடியே இறந்த கிடந்த ஐ.டி., ஊழியர்
மொபைல் போனில் பேசியபடியே இறந்த கிடந்த ஐ.டி., ஊழியர்
மொபைல் போனில் பேசியபடியே இறந்த கிடந்த ஐ.டி., ஊழியர்
மொபைல் போனில் பேசியபடியே இறந்த கிடந்த ஐ.டி., ஊழியர்
ADDED : மார் 14, 2025 04:23 AM

அரியாங்குப்பம்: மொபைல் போனில் பேசியபடியே, மூக்கில் ரத்தம் வந்த நிலையில் இறந்து கிடந்த ஐ.டி., ஊழியர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியாங்குப்பம், காக்கையாந்தோப்பு சீனுவாச கார்டனை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் அல்போன்ஸ், 31; வில்லியனுார் தனியார் ஐ.டி., கம்பெனியில் பணி செய்து வந்தார். இவரது சகோதரி திருமணமாகி சென்னையில், வசிக்கிறார். அவரை பார்க்க இவரது தாய் சென்றுள்ளார். வயதான தந்தை மட்டும் வீட்டில் இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு அல்போன்ஸ், கம்பெனியில் இருந்து பணியை முடித்து விட்டு, கடையில், பிரைட் ரைஸ் வாங்கி வந்து, வீட்டில் இருந்த தந்தைக்கு கொடுத்து வீட்டு, அவரும் சாப்பிட்டார். அதன் பின், அவர் அறைக்கு சென்று துாங்க சென்றார்.
நேற்று காலை 7:30 மணிக்கு அவரது தந்தை பார்க்கும் போது, அவர் தனது கையை நெஞ்சில் வைத்தபடியும், மற்றோரு கையில், மொபைல் போனை காதில் வைத்து பேசிய நிலையில், இறந்து கிடந்தார். அவரது மூக்கில் இருந்து அதிக ரத்தம் வந்திருந்தது.
புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் அப்போன்ஸ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அவர், அதிக ரத்தம் அழுத்தம் காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர், யாருடன், பேசினார். அல்லது அவசரத்திற்கு யாரையாவது மொபைல் போனில் தொடர்பு கொண்டாரா, என போலீசார் விசாரித்து வருகின்றனர்.