/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாங்கனி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண அழைப்பிதழ் வழங்கல் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண அழைப்பிதழ் வழங்கல்
மாங்கனி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண அழைப்பிதழ் வழங்கல்
மாங்கனி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண அழைப்பிதழ் வழங்கல்
மாங்கனி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண அழைப்பிதழ் வழங்கல்
ADDED : ஜூன் 19, 2024 05:27 AM

காரைக்கால் : மாங்கனி திருவிழாவை முன்னிட்டு புனிதவதி,பரமதத்தர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அழைப்பிதழ் கொடுத்துள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் 63 நாயன்மார்களின் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனிக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடந்தது வருகிறது.
இதில் இன்று (19ம் தேதி) மாப்பிள்ளை அழைப்பும். 20ம் தேதி காரைக்கால் அம்மையார் பரமதத்தர் செட்டியார் திருக்கல்யாணமும், இரவு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடும், மறுநாள் 21ம் தேதி சிவபெருமான் அடியார் கோலத்தில் வீதி உலா வருவதும். அப்போது பக்தர்கள் மாங்கனி விசும் பைபவம் நடக்கிறது.
அன்று மாலை அம்மையார் சிவபெருமானுக்கு மாங்கனியுடன் அமுதுபடையல் நிகழ்ச்சி நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் புனிதவதி,பரமத்தர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பாரம்பரியமான மஞ்சல் பத்திரிக்கையில் பக்தர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.