/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
ADDED : ஜூலை 24, 2024 06:25 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மாநில ஏ.ஐ.டி.யு.சி., சாலையோர வியாபார தொழிலாளர் சங்கத்தின் விரிவடைந்த பேரவை மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, திருவள்ளுவர் நகர் பகுதியில், நடந்தது.
அந்தோணி, பாலா, மலர்விழி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தை ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம் துவக்கி வைத்து பேசினார்.
கவுரவ தலைவர் அபிேஷகம், மாநில தலைவர் தினேஷ் பொன்னையா ஆகியோர் சிறப்புரையாற்றி, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர். மாநில செயலாளர் துரை செல்வம், மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சாலையோர வியாபார குழு உறுப்பினரை தேர்வு செய்யும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.