/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராஜேஸ்வரி கல்லுாரியில் அறிமுக வகுப்பு துவக்கம் ராஜேஸ்வரி கல்லுாரியில் அறிமுக வகுப்பு துவக்கம்
ராஜேஸ்வரி கல்லுாரியில் அறிமுக வகுப்பு துவக்கம்
ராஜேஸ்வரி கல்லுாரியில் அறிமுக வகுப்பு துவக்கம்
ராஜேஸ்வரி கல்லுாரியில் அறிமுக வகுப்பு துவக்கம்
ADDED : ஜூலை 07, 2024 03:48 AM

மரக்காணம்: கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான அறிமுக வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.
பொம்மையார்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2024-25ம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் இன்டக்ஷன் ப்ரோகிராம்” எனப்படும் புத்தாக்க செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.
முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கும் இந்த விழாவில் கல்லுாரி செயலர் சிவக்குமார் தலைமை தாங்கி, பெற்றோர்கள், மாணவிகளை வாழ்த்தி பேசினார். கல்லுாரி முதல்வர் கண்ணன் வரவேற்றார்.
கவிஞர் பால்கி மற்றும் நால்லாசிரியர் பச்சையம்மாள் ஆகியோர் சிறப்பு விருத்தினர்களாக கலந்துகொண்டு, நகைச்சுவை மற்றும் தன்நம்பிக்கைப் குறித்து பேசினர். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முதலாம் ஆண்டு மாணவிகள் மற்றும் பெற் றோர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்டனர்.
துணை முதல்வர் பூமாதேவி நன்றி கூறினார்.