/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நான்குவழிச்சாலையில் 'ஆன்டி கிளார் ஸ்கிரீன்' பொருத்தும் பணி தீவிரம் நான்குவழிச்சாலையில் 'ஆன்டி கிளார் ஸ்கிரீன்' பொருத்தும் பணி தீவிரம்
நான்குவழிச்சாலையில் 'ஆன்டி கிளார் ஸ்கிரீன்' பொருத்தும் பணி தீவிரம்
நான்குவழிச்சாலையில் 'ஆன்டி கிளார் ஸ்கிரீன்' பொருத்தும் பணி தீவிரம்
நான்குவழிச்சாலையில் 'ஆன்டி கிளார் ஸ்கிரீன்' பொருத்தும் பணி தீவிரம்
ADDED : ஜூன் 10, 2024 07:02 AM

புதுச்சேரி : நான்கு வழிச்சாலையில் எதிரில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு ஒளியை தடுக்க, 'ஆன்டி கிளார் ஸ்கிரீன்' பொருத்தும் பணி நடக்கிறது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையிலான 194 கி.மீ., துார நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த 2 ஆண்டிற்கு முன்பு துவங்கியது.
விழுப்புரம் ஜானகிபுரம் சந்திப்பில் துவங்கி எம்.என்.குப்பம், மங்கலம் - கடலுார் சிப்காட், காரைக்காடு - சிதம்பரம், சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை பணி நடக்கிறது.
இச்சாலையில் வாகனங்கள் 80 முதல் 100 கி.மீ., வேகத்தில் செல்ல கூடிய அளவில் கான்கிரீட் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற அதிவேகமாக செல்ல கூடிய 4 வழிச்சாலைகளில், இரவு நேரத்தில் எதிர் திசையில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு ஒளியை தவிர்க்க சாலையின் நடுவில் அரளி உள்ளிட்ட செடிகள் வளர்க்கப்படும்.
செடிகள் வளர்க்க சாலை நடுவில் 4 மீட்டர் இடம் தேவை. விழுப்புரம் நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் நகர பகுதி வழியாக செல்லும் இடங்களில் இவ்வாறு செடிகள் அமைக்க போதிய இடம் இல்லை.
இதனால் சென்டர் மீடியன்களில் எதிரில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு ஒளியை தடுக்கும் வகையில், 'ஆண்டி கிளார் ஸ்கிரீன்' பொருத்தும் பணி நடந்து வருகிறது.
மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில், அரியூர், பங்கூர் உள்ளிட்ட இடங்களில் 4 வழிசாலை சென்டர் மீடியன்களில் இந்த ஆண்டி கிளார் ஸ்கிரீன் பொருத்தப்பட்டு வருகிறது.